சிறப்புப் பகுதி
2025ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்த சில புதிய நாவல்கள் வாசகர்களைக் கவர்ந்திருக்கின்றன. நாவலின் வடிவம், கதைக்களம், மொழி எனப் பல அம்சங்களும் கடந்த கால்நூற்றாண்டுப் காலத் தமிழ் நாவல் போக்கிலிருந்து மாறுபட்டிருப்பதை உணர முடிகிறது. புத்தாயிரத்தை நாவலின் காலம் என்று அழைக்கும்படியாக பல்ேவறு தரப்புகளிலிருந்து, பல்வேறு எழுத்தாளர்களிடமிருந்து புதிய புதிய நாவல்கள் வெளிவருகின்றன. மண்சார்ந்த புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிறு, பெரு தொழில்சார்ந்த கதைக்களத்தை எழுதும் நாவலாசிரியர்கள் உருவாகியுள்ளார்கள். ஆண், பெண் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் புதிய கோணத்துடன் எழுதும் பெண் நாவலாசிரியர்களின் வருகை கவனத்துக்குரியதாக அமைந்திருக்கிறது. இந்நாவலாசிரியர்களின் கூர்ந்த அவதானிப்பும் நேர்மையான அனுபவமும் நாவல்களில் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது. காலத்தையும் வெளியையும் புதிதாகப் படைத்திருக்கும் ஐந்து நாவல்களை இந்தச் சிறப்புப் பகுதியில் கவனப்படுத்துகிறோம். இந்தக் கவனமூட்டல் வரும் இதழ்களில் தொடரும்.
- பொறுப்பாசிரியர்