புதிய சாதியவாத உள்ளூர் யதார்த்தங்கள்: சாதி வன்முறையில் இளைய தலைமுறையினர்
சிவகங்கை கண்டதேவி தேரோட்டத்தில் எந்தச் சாதிக்கும் முதல் மரியாதை தரக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் அண்மையில் கருத்து தெரிவித்திருந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை “தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடு இல்லையென உறுதியாகச் சொல்ல முடியுமா?” என்று கேள்வியெழுப்பியிருந்தது.
“தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் சாதியப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது” என்றும் கவலை தெரிவித்திருந்தது.நீதிமன்றத்தின் இக்கூற்று படித்தவர்கள் அதிகமானால் சாதியப் பாகுபாடு குறைய வேண்டும்/குறையும் என்கிற நவீன மதிப்பீட்டிலிருந்து பிறந்திருக்கிறது. இதுவொரு முரண்பட்ட நிலை என்று கருதுவதனால் நீதிமன்றம் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறது. சாதிய அமைப்பு இந்திய அளவிலான செயல்முறை. அது பழைமையானது மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தின் நம்பிக்கையாகவும் அழுத்தம் பெற்றிருக்கிறது. எனவே அது மாறுவதென்பது தமிழ்நாடு என்கிற பிராந்தியம் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்க முடியாது. இந்திய அளவிலான மாற்றங்களோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்க முடியும். அதேவேளையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டி