நிசந்தானோ? சொப்பனமோ?
“ஒரு தமிழ் எழுத்தாளருக்கு அகில இந்திய அளவில் கருத்தரங்கு நடந்தது இதுதான் முதல் தடவை. க. நா. சுப்ரமண்யம்தான் அதற்குத் தூண்டுதல்” என்றார் வல்லிக்கண்ணன். சாகித்திய அகாதமி 1987இல் தில்லியில் நடத்திய புதுமைப்பித்தன் நினைவு கருத்தரங்கிற்கு மூலகாரணம் க. நா. சுப்ரமண்யம்தான்.
புதுமைப்பித்தனுக்காக வேறெவரும் செய்யாத காரியத்தைச் சாதித்தவர் க.நா.சு. அவர் புதுமைப்பித்தனுக்குச் செய்த தொண்டு 1987ஆம் ஆண்டு நடந்த ‘புதுமைப்பித்தன் நினைவுக் கருத்தரங்கு’. இந்தக் கருத்தரங்கைப் பற்றி புதுமைப்பித்தன் ஆய்வாளர் எவரும் இதுவரை எங்கும் எழுதியதாகத் தெரியவில்லை.
1987, நவம்பர் 28-29 தேதிகளில் நடந்த இந்தத் தேசியக் கருத்தரங்கு நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைமகனான புதுமைப்பித்தனின் மேதைமையைத் தமிழுலகிற்கு அப்பாலும் கொண்டுசென்றது. பிறமொழியினருக்கும் புதுமைப்பித்தனின் சாதனைகளை அறிவிக்கும் நோக்கில் எழுந்த முதல் நிகழ்வு. இந்தக் கருத்தரங்கைச் சாகித்திய அகாதமி நடத்தியது என்றாலும் முன்கை எடுத்தவர் க.நா. சுப்ரமண்யம். முன்னின்று நடத்தியவரும் அவரே.
இக்கருத்தரங்கைப் பற