நரம்பில்லாத நாக்கு
நரம்பில்லாத நாக்கு
காசாவில் டிராக்டரில் எஞ்சியிருக்கும்
துருவேறிய மாவுத் துகள்களை
நக்கி உயிர் பிழைக்கிறது
சிறுவனின் நாக்கு
இதற்குப்பின் வாழ்நாளில்
பார்க்கவே மாட்டோம் என்பதுபோல
ஐஸ்க்ரீம் மூடியை நக்கி ஆசைதீர்க்கிறது
ஒரு நிராசைக்காரனின் நாக்கு
குற்றவுணர்வு சரியாக
தொண்டையை அடைக்கும்போது
நீலம் பாரிக்கிறது
நல்லான் ஒருவனின் நாக்கு
*
நரம்பில்லாத நாக்கே
ஞாபகங்களற்ற நாக்கே
நீ அசைந்துகொண்டிருப்பது
யாருடைய பூட்சை நக்க
யாருடைய நெஞ்சைக்கீர
*
அடிக்கடி வரும் கனவு இது
என் நீண்ட நாக்கில் கழுத்தை இறுக்கி
நான் தூக்கில் தொங்கிக்கொண்ட