மண்குதிரை கவிதை
ஓவியம்: செல்வம்
1
பல்லாண்டுக் காலமாக
அசையாதிருந்த
அந்தச் சிறு கல்
சற்றுப்
புரண்டுவிட்டது
இந்த மாபெரும் பூமிப் பிரதேசத்தில்
அது அவ்வளவு பெரிய காரியமல்ல
ஆனால்
அதற்குப் பின்னாலிருந்த பெரும் பாறை
அதை எதிர்பார்க்கவே இல்லை
முதிர்ந்து பெருத்த தற்கொலை உடலைப் போல்
மலை உச்சியிருந்து
அது உருளத் தொடங்கிவிட்டது
பெரும் பாறை
பெருங்கற்களாக
உடைந்து உருள்கிறது
அந்த மலையின்
புதர்த் தாவரங்கள்
குத்துச் செடிகள்
சிறு கொடிகள்
எல்லார் வாழ்வாதாரத்திலும்
பேரிடர்ப் பிரளயம்.
பெருங்கற்கள்
சிறு கற்களாகச்
சிதறி
உருள்கின்றன
எறும்புகள்
வண