பாரதியின் முகவுரை பெற்ற இரு பாரத புத்திரிகள் புதிய ஆதாரம்
பாரதியின் காலத்தில் வாழ்ந்த சகோதரிகள் இருவர் தாங்கள் சேர்ந்து படைத்த புதினத்திற்குப் பாரதியிடம் முகவுரை பெற விரும்பியிருக்கின்றனர். பாரதியும் முகவுரை அளித்திருக்கின்றார். ஆயினும் அது வழக்கமான அணிந்துரை போல அல்லாமல் நூலின் சாரம் என்னும் நிலையிலும் கவிதையாகவும் அமைந்திருந்தது.
- இந்தச் செய்தி பாரதியியலில் பரவலான கவனத்தைப் பெறவில்லை; தெளிவான முறையிலும் பதிவாகவில்லை.
எனினும் இம்முகவுரைக் கவிதை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘பாரதி பாடல்கள்: ஆய்வுப் பதிப்பு’ நூலிலும், சீனி. விசுவநாதன் பதிப்பித்த ‘கால வரிசையில் பாரதி பாடல்கள்’ நூலிலும் இடம்பெற்றுள்ளது. கவிதைச் சிறப்பு நோக்கிலும்கூட இக்கவிதை உரிய இடத்தைப் பெறவில்லை.
காதலும் துறவும்
மலர்
வண்டுதேன் உண்ண வரில்இதழ்
திறவேன்!
<span style="background-color:#ffff99"