சுதாரிப்பு
சுதாரிப்பு
வழக்கமாக விழும் அடிபோல அன்று,
அந்த அடி.
அவனுக்குத்தான் முதன் முறை
விழுந்தது.
பிழைக்கத்தெரியாதவன் மாதிரி இல்லை
பதுங்கத்தெரியாதவன் மாதிரி
சத்தியத்தின் பேரில்
ஒற்றுமையின் பேரில் என
எதை எதையோ உளறிக்கொட்டி
நெஞ்சை நிமிர்த்தி
அதை எதிர்கொண்டான்.
அப்பொழுதிலிருந்துதான்
பணிவது மாதிரி இல்லை
பாயத் தெரியாதது மாதிரி
எல்லோரும்
பதுங்கி பதுங்கியொன்றை வாழ்வதை,
இனி புண்ணியமில்லை எனப் பார்த்துக்கொண்டிருந்தான்.
மின்னஞ்சல்: amardhaya130@gmail.com
