பிறழ் தகவல்களின் காலம்

தவெக கட்சி தலைவர் விஜய்யின் அண்மைப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்படப் பலரும் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பிறழ்தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் சமூக வலைதளங்களில் மக்களிடையே சண்டைச் சச்சரவுகளும் அரசியல் கட்சியினரிடையே கடும் மோதல்களும் ஏற்பட்டன. அதன் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் சென்றுசேர்வதில் சிக்கல்கள் உருவாயின. இதுபோன்ற பெரும் துயரச் சம்பவங்களின்போது பரவும் பிறழ்தகவல்கள் மக்களிடையே உள்ள வேறுபாட்டையும் வெறுப்பையும் இன்னும் ஆழமாக்கும் ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.
கரூர் துயரச் சம்பவத்தில் பிறழ் தகவல்கள் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 25 சமூக வலைதளப
