உங்களில் ஒருவன்
உங்களில் ஒருவன்
கூஜா தூக்குபவர்களைப் பற்றி
எனக்கு எந்தக் கருத்துமில்லை
என்னைத் தூக்க சொல்பவர்களுக்கு
மட்டுமானது என்னவெனில்
சாரி... என் மனநிலை
பல நேரங்களில்
நான் சொல்வதையே கேட்காது
அதிகாரம் செலுத்த முடியாது
பயமுறுத்துவது அறவே ஆகாது
நடிக்கச் சொல்லிக் கெஞ்சினால்
கழுவுற நீரில் நழுவுற மீனாய் இராது
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாய்
முடியாதுயென வெட்டிப் பேசிவிடும்
ஆகவே
கூஜா தூக்குவதற்கென்றே
கைதேர்ந்தவர்கள் அதிகமிங்கே
அவர்கள் பெயரெழுதிய சீட்டுக்களைக்
குலுக்கிப் போட்டு
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையை
எடுக்கச் சொல்லுங்கள்
தயவு செய்து
என்னை ஆளை விடுங்கள்.
அத்தருணத்திற்குப் பிறகு
தண்டவாள இடைவெளியில் காலை விட்ட பரிதவிப்பு
நடைபாதையில் ஆழ்ந்துறங்கும்போது
ஒற்றைக் காலை இழந்தவனின் வாதை
<b
