சவால்

சவால்
அடுக்குப் பானைகளைத்
தலையிலேற்றிச் செல்பவளின்
கவனக்குவிப்புக்குச்
சற்றும் குறைந்ததில்லை
என் சொற்கள் மீது
நான் கொண்டிருப்பது
இருந்தும்
கடுகோடு கலந்திருக்கும்
கேழ்வரகினைத் தேடுவதாகக்
கூர்ந்திருக்கிறாய்
பிழை கண்டறிய
இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்
கயிற்றின் மீது நடப்பதாகவே
உன்னோடான உரையாடல்
எப்போதும்
அற்ற நம்பிக்கையின் முன்
தாக்குப்பிடித்தல்
அன்பிற்கென்றும் சவால்.
நீ கொஞ்சம் விலகு...
மின்னஞ்சல்: kanagabalan302@gmail.com

கவிதைகளுக்கான ஓவியங்கள்: நரசிம்ம பாலாஜி, சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 3டி அனிமேஷன், கிராபிக்ஸ் துறையில் பணிபுரிந்தவர். தற்போது முழு நேர ஓவியர். ஓவியத்தின் பல்வேறு முறைகளையும் கையாள்பவர். குறிப்பாய் நீர் வண்ண ஓவியங்களை முயற்சிப்பவர்.
அன்றாடத்தின் மனிதர்களையும் விலங்குகளையும் நிகழ்வுகளையும் கோட்டாவியமாகக் காட்சிப்படுத்துவதில் ஆர்வமுள்ளவர்.
சர்வதேச நீர்வண்ண ஓவியச் சங்க (International Watercolor Society)த்துடன் இணைந்து இத்தாலி, வியட்நாம், கொஸோவா போன்ற நாடுகளில் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மின்னஞ்சல்: inbalaji14in@gmail.com
