என்ன செய்யப் போகிறோம்?

வரைகலை: மு. மகேஷ்
குழந்தை முதலில் பார்ப்பதில் ஆர்வம் கொள்கிறது; கண்ணால் ஒவ்வொன்றையும் கவனிக்கிறது; அப்போது, அது மட்டுமே இயலும். பின் கேட்கத் தொடங்கி, அதன் வழியே கற்றுக்கொண்ட பிறகே, மென்மெதுவாக, மழலையில் மிழற்றத் தொடங்கி, சொற்களை மீளமீளத் தெளிவற்றுச் சொல்லத் தொடங்கித் தெளிவடைகிறது. பின் சிந்திக்க ஆரம்பிக்கிறது. கண், வாய், காது என்று புலன்கள் வழியாகத் தொடங்கும் கற்றல், புலன்கள் தாண்டி, மனத்துக்குள் நுழைகிறது. கற்றலின் வெவ்வேறு வாசல்களைக் குழந்தையின் புலன்சார்ந்த படிநிலை வளர்ச்சியாகவும், ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்’ என்னும் திருமூலரின் பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். தாய் தந்தைக்குப் பின் குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடுபவராக, குழந்தையின் நம்பிக்கைக்குரியவராக ஆசிரியர் இருக்கிறார். இதனை, குழந்தையின்
