இலங்கையரா? இந்தியரா?
முகாம்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்த உரையாடல், வெறும் மத்திய அரசின் சட்டரீதியான நிலைப்பாட்டை மட்டும் குற்றம் சாட்டுவது அல்ல. தமிழகச் சமூகமும், அரசியல் தலைமைகளும், தமது தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து, மத்திய அரசின் மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்வதாகவே தெரிகிறது.
தமிழகத்தில் வாழும் 8.5 கோடித் தமிழர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கைத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை (சுமார் 92,000 பேர்) 0.10% மட்டுமே. இருப்பினும், அதே பண்பாடு, மொழி, பின்னணியைக் கொண்ட இவர்களை அங்கீகரிப்பதிலும், இவர்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் நிலவும் தயக்கம், சமூகத்தின் கவனக்குறைவையே காட்டுகிறது. கூடவே முகாம் என்பது தற்காலிகத் தங்குமிடம்தான் என்கிற ஓர்மையை அரசு அமைப்பு மறந்துவிட்டதா என்கிற எண்ணத்தையும் இந்த மனிதப் பிரச்சினை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஜனநாயக நடைமுறைக்குள்ளும் அனுபவங்களுக்குள் கலக்காத மனிதக் கூட்டமாக இந்திய வாழ் இலங்கை மக்கள் ஆக்கப்பட்டுள
