தீவிளி

ஓவியம்: ரோஹிணி மணி
‘அந்திமந்தாரையையும் நிசாகந்தியையும் பூத்த வுடனே பறித்து இந்தப் பித்தளைப்பெட்டியில் பச்சைக் கற்பூரமிட்ட துணி முடிச்சுடன் ஒரு வெள்ளிக்காசையும் வைத்து தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். பின் இருபத்து நான்கு நாட்கள் கழித்து, ஒற்றையிதழ் செம்பருத்தியையும், தாமரையையும் முக்கியமாய்ப் பெண்/ஆணின் ஜீவநீர் பட்ட துணி (சூதக/இந்திரியம்), தலைமுடியையும் சேர்த்துப் பெட்டியிலிட வேண்டும். நாற்பத்தெட்டாம் நாளில் ஆலம் சுற்றிக் கரைத்து வாசலில் கொட்டிவிட்டுப் பெட்டியைத் திறந்து வாடிய பூக்களைத் தோட்டத்தின் வாயுமூலையில் புதைத்துவைத்து விட்டு வெள்ளிக்காசை எடுத்துக்கொண்டு செல்லக் காரிய பலிதம்.’
நாற்பத்தெட்டாம் நாள் காசின் சில்லிப்பு உள்ளங்கையில் குறுகுறுக்க பூரணி வீட்டுக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.
