ஆர்எஸ்எஸ்ஸும் காரல் மார்க்ஸும்
2025 சில முக்கிய சமூக இயக்கங்களின் நூற்றாண்டு நிறைவுகளை உள்ளடக்கிய ஆண்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுயமரியாதை இயக்கம், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் எனும் ஆர்எஸ்எஸ் ஆகிய மூன்று இயக்கங்களும் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இம்மூன்று அமைப்புகளுமே தம் நூற்றாண்டு நிறைவு விழாக்களைக் கொண்டாடி முடித்துள்ளன. அவற்றில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா ஊடகங்களிலும் சமூக சிந்தனையாளர்களிடமும் அதிக கவனம் பெற்றது. கிட்டத்தட்ட ஓர் அரசு விழாவாகவே அது நடந்து முடிந்தது. இந்திய அரசு (தபால்துறை) ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை முன்னிட்டுச் சிறப்புத் தபால்தலையையும் (ரிசர்வ் வங்கி) சிறப்பு நாணயத்தையும் வெளியிட்டது. நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அவற்றை வெளியிட்டு அவ்வமைப்பின் பெருமைகளை வியந்து பேசினார்.
அதற்கு எதிர்வினையாகச் சில அதிர்ச்சிகளும் கண்டனங்களும் வெளிப்பட்டன. மூன்று முறை இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்துகொள்வதா, அவ்வமைப்புக்கு நாணயமும் தபால்தலையும் வெளியிடுவதா என்றெல்லாம் வினாக்களும் எழுப்பப்பட்டன. இவ்வினாக்களும் கண்டனங்களும் எவ்வித
