ஆறுதல் பரிசு
ஆறுதல் பரிசு
அனைவரும் ஆழ்ந்துறங்கும் நேரத்தில்
தன் அறைக்குத் திரும்புகிறவன்
சுவரை இழுத்துச் சாத்திக் கதவாக்குகிறான்
மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி வைக்கிறான்
ஒவ்வொரு உடுப்புகளாகக் கழற்றி வீசும் மெத்தையில்
தெரியச் சிரமப்படும் உருவமோ
ஒரு மனக்குறைச் சித்திரம்.
“ச்சே... எப்படி இதை அறியாமலிருந்தேன்”
“இன்று அவரை வேறு மாதிரி கையாண்டிருக்க வேண்டும்”
“இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது... என்ன செய்கிறேன் பார்”
பாத்திரங்கள் உருள, நாற்காலிகள் உதை வாங்க
அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை
தற்சமயம் தனக்குச் சாதகமான முடிவோடு அரங்கேற்றிப் பார்க்கிறான்.
பிறகு நினைவு திரும்பி பத்திரமாகத் தேடியெடுத்து
ஒப்பனை மேசையின் ஆளுயரக் கண்ணாடியின் மீதிருக்கும்
ஆணியில் அவன் புன்னகையுடன் அணிவிப்பது
வெறும் தன் அடையாள அட்டையை மட்டுமல்ல
நிலைக்கண்ணாடியில் தெர
