சுந்தர ராமசாமி (எனக்கு) எழுதிய இரண்டு கடிதங்கள்
இலக்கியத் தொடர்பிலும் தனிப்பட்ட முறையிலும் சுந்தர ராமசாமி பலருக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். பலருக்குச் சில கடிதங்கள். சிலருக்குப் பல கடிதங்கள். எனக்கும் சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றின் எண்ணிக்கை பத்துக்கும் மேல் இராது. கடிதங்களுக்குப் பதில் போடுவதில் நான் படுசோம்பேறி என்பது கடிதத் தொடர்பு செவ்வனே பேணப்படாமைக்கு முதல் காரணம். 1982முதல் 1985வரையான நான்கு ஆண்டுகளில் மாதம் ஒருமுறை அவரைச் சந்தித்துவந்தேன். விற்பனைப் பிரதிநிதியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த காலம். எனவே கடிதத்தில் பரிமாறிக்கொள்வதைக் காட்டிலும் நேர்ப்பேச்சில் பகிர்ந்துகொள்வது எளிதாகவும் வசதியாகவும் இருந்தது. அவருடனான சந்திப்புக்கு முன்னுரிமை கொடுத்தே அலுவலகப் பயணத் திட்டத்தையும் அமைத்துக்கொள்வேன். அதனால் அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.
அஞ்சல் அட்டையிலும் உள்நாட்டு உறையிலுமாக சுந்தர ராமசாமி எனக்கு எழுதிய கடிதங்கள் வீடு மாற்றத்திலும் ஊர் மாற்றத்திலுமாகக் காணாமற்போயின. கடிதங்களுக்குப் பதில் எழுதுவதில் எவ்வளவு அக்கறையில்லாதவனோ அதே அளவுக்குக் கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைப்ப
