பிள்ளையோ பிள்ளை

மதியம் இரண்டு மணி இருக்கும். உணவுவேளை கடந்தும் உணவெடுக்க முடியாத அளவுக்கு வேலை. பசியோடு, ஆனால் சாப்பிட முடியாத எரிச்சலுடன் வேலை செய்துகொண்டிருந்தேன். வேகமாக ஒருவர் உள்ளே நுழைந்தார். பவுடர் பூசி, தலைவாரிப் பூச்சூடியிருந்தார். பெற்றோரில் பெரும்பாலும் பெண்கள், வீட்டு வேலையிலிருந்தோ அல்லது வெளி வேலையிலிருந்தோ வருவார்கள் என்பதால் வாடியிருக்கும் முகம்.
‘உக்காருங்கம்மா... என்ன விஷயம் சொல்லுங்க?”
“எம் பிள்ள எட்டாம் வகுப்புங்க. யாழினி. அவங்க மிஸ் ஸ்காலர்ஷிப் காசு வாங்க வரச் சொல்லியிருந்தாங்க அதுக்குத்தான் வந்திருக்கேன்மா” என்றார் எதிரிலிருந்தவர்.
கோபம் வந்தது எனக்கு. ஓ.. நீங்கதானா அது என்று நினைத்தபடி, எட்டாம் வகுப்பு ஆசிரியரை வரச் சொன்னேன்.
ஜமுனா மிஸ் வேகவேகமாக உள்நுழைந்தார். “பத்தாம் வகு
