ஏப்ரல் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஏப்ரல் 2026
    • கட்டுரை
      புகழ்மொழி வீச்சம்
      இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷா பரிவார் என்னும் ஒட்டுவேலை
      காவல் இறப்புகள்: நிர்வாகத் தோல்வியா-?
      இஸ்தான்புல்: இருவேறு உலகங்களின் நகரம்
      ஈரான் போர்: எப்படித் தொடங்கியது? எவ்வாறு முடியும்?
      காசியில் பெரியார்
    • கதை
      இருவர்
      பூட்டனாரும் பேய்பூதங்களும்
    • அஞ்சலி: வ. ஜெயதேவன் (1947-2026)
      அகராதியியல் துறையில் புலமை பெற்றவர்
    • பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கருத்தரங்கு
      தமிழ்ச் சமூகத்தின் நன்றியறிதல்
    • அஞ்சலி: கே.என். பணிக்கர் (1936- 2026)
      வரலாற்றில் நிற்பவர்
    • கற்றனைத்தூறும் -16
      பிள்ளையோ பிள்ளை
    • கடிதங்கள்
      கடிதங்கள் 01.03.2026
    • அஞ்சலி: யூர்கென் ஹேபர்மாஸ் (1929 – 2026)
      உரையாடலுக்கு இடமளிக்கும் செயல்பாடே இன்றைய தேவை
    • அஞ்சலி: ஆர். பார்த்தசாரதி (1934–2026)
      ஆங்கிலச் சங்கிலியில் பிணைத்த தமிழ் நாக்கு
    • மதிப்புரை
      இருளில் நகரும் பெண்கள்
    • கவிதைகள்
      மம்தா சாகர்
    • அஞ்சலி: தோழர் நல்லகண்ணு (1925–2026)
      அறத்துக்குச் சாட்சியானவர்
    • தலையங்கம்
      தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்
    • கவிதை
      முந்நூறு குழந்தைகள்
      ஆறு, ஒரு காலத்தில்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2026 பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கருத்தரங்கு தமிழ்ச் சமூகத்தின் நன்றியறிதல்

தமிழ்ச் சமூகத்தின் நன்றியறிதல்

பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கருத்தரங்கு
வேதவல்லி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டுக் கருத்தரங்கு 12.3.2026 அன்று சென்னையில் நடந்தேறியது. கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர். சரஸ்வதி ராம்நாத்தின் ஆளுமை, படைப்புத்திறன், மொழிபெயர்ப்பின் சிறப்பு எனப் பல்வேறு கூறுகளையும் எடுத்துரைப்பதாக ஐந்து அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. மலர்விழி தொடக்கவுரை ஆற்ற சரஸ்வதி ராம்நாத்தின் மகன் மருத்துவர் ரகுராமன் வரவேற்பு வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப. விமலா வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் சரஸ்வதி ராம்நாத் குறித்து ப்ரீதா ஜெயராமன் உருவாக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவரின் பன்முகத் திறன்களை வெளிக்காட்டும் விதமாக அழகிய கவிதைபோல அந்த ஆவணப்படம் திகழ்ந்தது.

இரண்டாம் அமர்வில் ஆர். சிவக்குமார், திருப்பூர் கிருஷ்ணன் ஆகிய இருவரும் உரை நிகழ்த்தினார்கள். அவரது மொழிபெயர்ப்புத் திறன் குறித்தும் மரபார்ந்த இலக்கிய பயிற்சி குறித்துமான கருத்துகளை இவர்கள் முன்வைத்தார்கள். அவருடனான தம் நட்பு குறித்தும் திருப்பூர் கிருஷ்ணன் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

‘சரஸ்வதி ராம்நாத்: வாழும் கணங்கள்’ மூன்றாம் அமர்வில் அவருடைய குடும்ப நண்பர்களும் உறவினர்களும் தம் அழியாத ஆத்மார்த்தமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எழுத்து, மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு அவர் வாழ்ந்து காட்டிய சலிப்பில்லாத வாழ்வு முறையையும் துன்பங்களைக் கண்டு சோராத அன்புள்ளத்தையும் கடைசி காலத்தில் நோயுற்றபோதும் தம் எழுத்துப் பணியை விட்டுவிடாத மன உறுதியைக் குறித்தும் உளவியல்துறை சார்ந்த மருத்துவர் வெங்கடேஸ்வரன், சரஸ்வதி ராம்நாத்தின் சகோதரியின் மகனான, புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வழக்கறிஞர் சுதா சிவக்குமார் ஆகியோர் நினைவுகூர்ந்தார்கள். அன்புக்குரியவரை நினைவுகூரும் அழகான தருணமாக இவ்வமர்வு திகழ்ந்தது.

நான்காம் அமர்வு சரஸ்வதி ராம்நாத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆறு நூல்களைப் பற்றிய அலசலாக அமைந்தது. இராதையுமில்லை ருக்மணியுமில்லை, கங்கைத்தாய், தர்பாரி ராகம், கோதானம், அமிர்தமும் விஷமும் ஆகிய மொழியாக்கங்கள் குறித்து முறையே சித்ரா பாலசுப்ரமணியம், சுப்ரமணி இரமேஷ், சுனில் கிருஷ்ணன், எம். கோபாலகிருஷ்ணன், தி. சிவக்குமார், என். ஸ்ரீராம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். தானே ஒரு படைப்பாளராக இருந்தும் மொழிபெயர்ப்பைத் தம் இடையறாத பணியாக ஒரு வேள்விபோல அவர் மேற்கொண்ட தன்மை குறித்தும் அவருடைய மொழிபெயர்ப்பின் தனித்தன்மைகளைச் சிறப்புற எடுத்துக் காட்டுவதாகவும் உரைகள் அமைந்திருந்தன.

ஐந்தாம் அமர்வில் ‘சரஸ்வதி ராம்நாத்தின் ஆளுமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாவண்ணனும் ‘இந்திய மொழிகளுக்குள் மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியும் சிறப்பான உரைகளை வழங்கினார்கள். காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரத்தின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

- வேதவல்லி

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.