இஸ்தான்புல்: இருவேறு உலகங்களின் நகரம்
இஸ்தான்புல் நகரில் எந்தத் திசையில் எங்கு சென்றாலும் கூர்மையான சிறிய கண்களும் மெலிந்த ஆளுமையான உடல்வாகும் கொண்ட ஒரு சிறிய மனிதரின் சுவரொட்டியோ, பதாகைகளோ தென்பட்டுக் கொண்டேயிருக்கும். யாராக இருந்தாலும் இந்த மனிதர் யார் என்று அறியும் ஆவல் மேலிடாமல் போகாது.
அந்த மனிதர் முஸ்தபா கெமால் அதாதுர்க். துருக்கியப் புரட்சிகர அரசியல்வாதி, எழுத்தாளர், துருக்கிக் குடியரசின் ஸ்தாபகத் தந்தை. 1923முதல் 1938இல் அவர் இறக்கும்வரை துருக்கிக் குடியரசின் முதல் ஜனாதிபதி. துருக்கியை மதச்சார்பற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியதுடன் அதற்கான அத்தனை திருத்தங்களையும் செயலுருவாக்கியவர்.
ஒட்டமான் பேரரசின் வீழ்ச்சியை அடுத்துப் புதிதாக உருவான துருக்கியக் குடியரசின் தலைவராக, நவீன, முற்போக்கான, மதச்சார்பற்ற தேசிய அரசைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல், பொருளாதார, கலாச்சாரச் சீர்திருத்தங்களின் கடுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். ஆரம்பக் கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. பழைய ஒட்டமான் துருக்கிய எழுத்துக்களுக்குப் பதிலாக லத்தீன் சார
