முந்நூறு குழந்தைகள்

2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்க - இஸ்ரேல் குண்டு வீச்சில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் அறிக்கை.
முந்நூறு குழந்தைகள்
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
அவர்களுக்கு
முந்நூறு அம்மாக்களும்
முந்நூறு அப்பாக்களும் இருந்தார்கள்
அதை விட அதிகம்
அண்ணன்மாரும் அக்காள்மாரும்
தம்பிமாரும் தங்கைமாரும் இருந்தார்கள்.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும்
முந்நூறு வீடுகள் இருந்தன
அதைவிட அதிகம்
செல்லப் பிராணிகளும்
செல்லப் பறவைகளும்
செல்லத் தாவரங்களும் இருந்தன.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும்<b
