புகழ்மொழி வீச்சம்
முதுமையை உணரும் சந்தர்ப்பத்தில், சம்பாத்தியமும் பணமும் சலிக்கும் போதில் கொடை வள்ளல் அவதாரம் எடுத்துப் பிரமுகராகும் உள்ளூர்ப் பணக்காரர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். சிறுதொகையை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு மேடையின் நடுநாற்காலியில் உட்கார்ந்துகொள்வார்கள். இந்திரன் சந்திரன் மானே தேனே எல்லாம் போட்டு ஆளாளுக்குப் போற்றும் மொழிகளைக் கேட்டுக்கொண்டு ஆனந்தமாக வீற்றிருப்பார்கள். தமிழ்ச் சங்கம், கம்பன் கழகம், சேக்கிழார் மன்றம் என மரபான இலக்கியக் கூட்டங்களில் அவர்களுக்கான நாற்காலி நிரந்தரம். தீவிர இலக்கிய வாசிப்புக்கு வரும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து ஏதோ ஒரு ‘வாசகர் வட்டம்’ என்று பெயர் வைத்துப் பேசி மகிழும் கூட்டம் பற்றித் தகவல் அறிந்தால் அங்கும் தம் தலையை எப்படியாவது நுழைத்துக்கொள்ள முயல்வார்கள். தேநீர் உபயம், சால்வை உபயம், கலவைச் சோறு உபயம் என்று ஏதேனும் ஒன்றில் தம் பெயரைப் பொறித்தபடி முதலில் வாலையும் பிறகு காலையும் நுழைப்பார்கள். ஊரில் நடக்கும் எல்லா மேடைகளும் போற்றிப் புகழ்கையில் ஒரு பத்துப் பேரை ஒதுக்கமாக விட்டுவிட முடியுமா?
மனிதருக்கு நிறைவே ஏற்படாத சில ந
