ஆறு, ஒரு காலத்தில்
ஆறு, ஒரு காலத்தில்
காகிதக் கப்பல்களால்
என் விலாவில் சிறுவர்கள் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள்.
என்னை ஒரு குட்டையாய்
எருமைகள் மாற்றிவிட்டன
அகிலும் பழைய பூக்களும் படிந்தன
என் கூந்தலில்
ஒவ்வொரு மாலையும்
கோயில்களின் நெற்றியில்
மணிகள் புரளும் போது
படித்துறையில் ஒருவன்
கால் கழுவுவதைக் காண்கிறேன்
ஊட்டி வளர்த்த
கொக்குகளும் மீன் கொத்திகளும்
பறந்து விட்டன என் முலைக் கண்ணிலிருந்து
அவற்றுடன் என் கரங்களில் உறங்கிய
அரசரும் புலவரும் கூடப் பறந்துவிட்டனர்
நானொரு சாக்கடையாகி
இப்போது ஒருவர்க்கும் பயனில்லை
இந்த இனிய நகரத்தின் ஆறு,
ஒரு காலத்தில்
வைகையால்.
முறையீடு
மாலையில்
கூடும் போக்குவரத்தில்
வீதி வீட்டின் பக்கம்
