காசியில் பெரியார்

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கராகப் பிறந்த தந்தை பெரியார், தமிழ்ச் சமூக அரசியலை முற்றாக மறுசீரமைத்த பகுத்தறிவாளராக உருவான பயணம், ஒரு திடீர் அறிவொளியின் விளைவு அல்ல; பல கட்டங்களைக் கொண்ட அனுபவப் பயணம் அது. அந்தப் பயணத்தின் மிக முக்கியமான மனமாற்றப் பட்டறிவுப் புள்ளி காசி.
ஒரே சமூகச் சூழலில் வாழும் இலட்சக்கணக்கான மனிதர்களில் பெரும்பான்மையோர் அந்தச் சூழலையே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால் சிலரே அந்தச் சூழலின் அடித்தளங்களையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள். சமூக அமைப்புகள் இயற்கையானவை அல்ல; அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வை அடைவோர் மிகச் சிறுபான்மை. அந்தச் சிறுபான்மையில் ஒருவர் தந்தை பெரியார்.
காசி யாத்திரை
பெரியார் துறவி ஆக நினைத்ததற்குக் காரணம் என்ன? அவர் ஏன் காசிக்குச் செல்லத் தீர்மானித்தார்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நேரடியான பதிலை வழங்குவது சா
