ஈரான் போர்: எப்படித் தொடங்கியது? எவ்வாறு முடியும்?

ஈரான் மீதான தாக்குதல் பிப்ரவரி 28ஆம் நாள் தொடங்கியது. அப்போது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் சில கணக்குக் கூட்டல் இருந்தது. போர் ஈரானில் தொடங்கி ஈரானில் முடியும். கூடிப்போனால் சிறிய தோதில் மேற்காசியாவிற்குப் படரும். எப்படியும் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.
ஈரானிய அரசு சரணடையும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம். அதற்கு வெகுமக்கள் ஆதரவும் இருக்கும். அரபு நாடுகளுடன் இஸ்ரேல் கூடுதல் இணக்கமாக இந்தப் போர் வழிவகுக்கும் என்ற எல்லாக் கணக்குகளும் பிசகிவிட்டன. இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக, விளைவுகள் நேர் எதிர்த் திசையில் பயணிக்கின்றன.
போரின் முதல் நாளிலேயே தலைநகர் தெஹ்ரானில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது ராணுவத் தளபதிகளும் குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். அது ரமலான் மாதத்தின் பத்தாம் நாள். அதே நாள
