காந்தி: பெண்களும் தீண்டாமை யாத்திரையும்
கேரளாவில் கௌமுதி தன் நகைகளைக் கழற்றித் தரும் காட்சி
1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய காந்தியின் தீண்டாமைக்கு எதிரான யாத்திரை 1934 ஆகஸ்டு இரண்டாம் தேதி வரையான ஒன்பது மாதங்கள் நீடித்தது. அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் முழுக்க முழுக்கத் தீண்டாமைக்கு எதிரான உரையாடலாகத் தமது முழுப் பயணத்தையும் காந்தி அமைத்துக்கொண்டார்.
விடுதலைக்கான போராட்டங்களிலும் சமூக விடுதலைக்கான போராட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது; இதைத் தென்னாப்பிரிக்காவிலேயே உணர்ந்திருந்தவர் காந்தி. தம் சத்தியாகிரகச் சோதனைகளுக்கான உந்துதல்களை கஸ்தூர்பாவிடமிருந்து பெற்றிருப்பதாக காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.தண்டி யாத்திரையில் பெண்கள் இடம்பெறவில்லை. ஆசிரமத்தில் பயிற்சிபெற்ற ஆண்களும் வெளியாட்கள் சிலருமே அதில் இடம்பிடித்திருந்தனர். ஆசிரமப் பெண்கள் பலவாறு கோரிக்கை வைத்தும், &ldqu