கடிதங்கள்
பா. செவுடனான நேர்காணலின் பெரும் பகுதியில் அவர் படைப்புகளில் கட்சிப் பிரச்சாரம் மேலோங்கி இருப்பதால் படைப்பாற்றல் நிறைவானதாக இல்லை என்ற கருத்தை அவரை ஏற்கச்செய்ய முற்பட்டது தேவையற்றது. கொள்கைச் சார்புடையோர் படைப்புகளில் கொள்கை பிரதிபலிக்கத்தான் செய்யும். இல்லையென்றால் அவை போலித் தன்மை கொண்டவை.
மரண தண்டனை மட்டுமின்றி எல்லாவிதத் தண்டனைகளையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தண்டனைகள், சிறைகள் எதற்கு? அவற்றினால் சமூகத்திற்கு ஏதேனும் பயனுண்டா? இவையெல்லாம் ஆராயப்பட்டுக் குற்றவியல் சட்டமே மாற்றப்பட வேண்டும். ‘அபூர்வத்திலும் அபூர்வமான’ என்ற சொற்றொடருக்கு ஒவ்வொரு நீதிபதியும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுதானே மரண தண்டனையை விதிக்கிறார்கள். பள்ளிகளில் கொடுக்கப்படும் தண்டனைகள் மாணவரது கற்றல் திறனையோ நடத்தையையோ மாற்றியதில்லை. சிறைச்சாலைகள் சீர்திருத்தும் நிறுவனங்களாக இல்லாது சீர்கேட்டை வளர்ப்பவையாகவே உள்ளன.
கார்வரின் கதை மனித மனத்தைச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது. புறத் தோற்றம் ஒருவரது அக அழகைக் காட்டாது என்ற ரொட்டிக்காரர் சித்தரிப்பு சிறப்பு.
<