மேற்குத் தொடர்ச்சி மலை
வேறெந்த கலைச் சாதனங்களை விடவும் திரைப் படமானது வெகுசனத்திரளைக் கலைச்செயற் பாட்டின் ஆக்கபூர்வமான பங்கேற்பாளர் என்னும் நிலையில் இருத்துவது. ஆனால் அவர்களை வெறும் நுகர்வோர் என்னும் நிலைக்குக் கீழிறக்கம் செய்வதற்கான தீவிர முனைப்புகள் நிகழ்ந்தேறிவருகின்றன. இத்தகைய முதலீட்டிய நுகர்வுவெறிப் பொருளியல் சூழலில் ஆக்கபூர்வமான கலைச் செயற்பாட்டினை மீட்டுருவாக்க அவ்வப்போது காத்திரமான திரைப்பட ஆக்கங்கள் உருவாகி வருவதைக் கணக்கில் கொள்ளவேண்டும். வெகுசன ரசனையை மலினப்படுத்தி லாபநோக்கமும் அரசியலற்ற வெற்றுத்திரளினை உருவாக்கும் ஏகபோக போக்குகளுக்கு எதிரான அரசியற்செயல்பாடாகவும் திரைப்படத்தைப் பார்க்கலாம். இவ்வாறு அரிதினும் அரிதாக ஆகிவரும் திரைப்படங்கள் சில வேளைகளில் உள்ளடக்க, வடிவ, செய்நேர்த்தி சார்ந்த சிக்கல்களுள் சிக்கிக் கலை அனுபவத்தைத் தருவதில் பின்னடைவை அடைவதுமுண்டு. இப்பின்னணியில் ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ கொண்டிர