ஒட்டகத்துக்குக் கோணல் ஓரிடத்திலா?
ஏழை, பணக்காரர் என்ற அடிப்படையில் பள்ளிகள் அமைந்துள்ளதை மாற்றி, பள்ளிக் கல்வி என்பது சாதி, சமய, சமுதாய, பொருளாதார அடிப்படையில் கல்வியில் வேறுபாடு காட்டாமல், பொதுப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்.
- கோத்தாரி கமிட்டி அறிக்கை 1964
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியக் கல்விக் கொள்கையை நிர்ணயம் செய்வதற்காக மத்திய அரசு 1964இல் டி.எஸ். கோத்தாரி தலைமையில் நிபுணர் குழுவை அமைத்தது. ஏழை பணக்காரர் என்ற அடிப்படையில் பள்ளிகள் அமைந்துள்ளதை மாற்றி பள்ளிக் கல்வி என்பது சாதி, சமய, சமுதாய, பொருளாதார அடிப்படையில் குழந்தைகளுக்கான கல்வியில் வேறுபாடு காட்டாமல் பொதுப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது அந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரை. 10+2+3 என்ற முறையை அதாவது பத்தாம் வகுப்புப் படித்து விட்டு இரண்டு ஆண்டு மேல்நிலைக் கல்விப் படித்து விட்டு, மூன்றாண்டுகள் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்