பாத்திரம் புதிது, பானம்?
ஏறத்தாழ பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் மேல்நிலைப் பாடப் புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான கனவுகளோடு பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கியது. தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கூட்டுமுயற்சியால் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு மாற்றங்கள் பல செய்யப்பட்டு பாடத்திட்டம் இறுதி வடிவம் பெற்றது. அதன் பின்னர் ஒன்று, ஆறு, ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளுக்குப் புதிய பாடப்புத்தகங்கள் 2018-19 கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன; மற்ற வகுப்புகளுக்குப் படிப்படியாக மாற்றியமைக்கப்படும்.
2005ஆம் ஆண்டு தேசியக் கலைத்திட்டம் இறுதிவடிவம் பெற்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஏழாண்டுகளுக்கு முன் ஒன்று முதல் பத்து வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப