படிக்காத பிள்ளை
முதலில் எங்கள் கிராமத்திலுள்ள சிறிய பள்ளியில் படித்தேன். அங்கு பிள்ளைகள் அதிகமாக இல்லை. மொத்தப் பள்ளிக்கும் சேர்த்து 25 பேர்தான். எங்கள் வகுப்பில் 2 ஆண் 2 பெண்- மொத்தம் 4 பேர். என் தாத்தா முருகன், பள்ளி ஆண்டுவிழாவின்போது கொடியேற்றுவார். என்னை மேடைக்கு அழைத்து மடியில் வைத்துக்கொள்வார். கூடப் படிக்கும் பிள்ளைகளிடம் இவர்தான் என் தாத்தா என்று சொல்லுவேன். சில நேரங்களில் சண்முகையா மாமாவும் உரையாற்றுவார். முக்கியமான விழாக்களின்போது எங்களுக்கு மிட்டாய் கொடுப்பார்கள்; அந்தப் பள்ளி எனக்குப் பிடித்திருந்தது.
பிறகு நாங்கள் நாகர்கோவிலுக்கு வீடு மாறினோம். என்னை ஒரு பெரிய மெட்ரிக் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும். என்னைத் தவிர எல்லாப் பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தது. முதல் பள்ளிக்கூடத்தில் மொத்தம் 25 பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இங்கே என் வகுப்பில் மட்டுமே 58 பிள்ளைகளைப் பார்க்க வ