போர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்
10.4.99 சனிக்கிழமை காலை 9.30 மணி
மிக நல்ல நாளாக இருக்க வேண்டியது. மிக மோசமான நாளாயிற்று. காலையில் Borges கதைகள் நாலைந்து படித்தேன். விபரம் Borges நோட்புக்கில் எழுதியிருக்கிறேன். எல்லாக் கதைகளையும் மேலோட்டமாகத்தான் படிக்க முடிந்தது. ஒன்றுக்கு இரண்டு முறை படித்தால் கதைகளுக்குள்ளே போய்விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. காலையில் பொது உடற்பயிற்சியும் அதன்பின் Tread Mill செய்தேன். 12 மணிக்குத் தயாராக இருப்பேன் என்று தைலாவிடம் சொல்லியிருந்தேன். அதன்படி கிளம்பினேன். வெளியே போகும் திட்டத்தில் பல குழப்பங்கள். மத்யானம் படுத்துக்கொண்டேன் என்றாலும் தூங்க முடியவில்லை. சானோஸே புத்தகக் கடைக்குச் சென்றோம். அங்கு எனக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டது. இரவு 8.30 மணிவாக்கிலேயே படுத்துக்கொண்டேன் என்றாலும் உறங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டேன். காலையில் 3 மணிக்கு மேல் சிறிது நேரம் தூங்கினே