ஏன் கொண்டாடுகிறீர்கள்?
ஏன் கொண்டாடுகிறீர்கள்?
அவரைப் படைப்பாளி என்கிறார்கள்
இவரை ஆளுமை என்கிறார்கள்
என்ன செய்ய முடிந்தது என்னால்?
ஆச்சியின் சாவைத் தடுக்க முடியவில்லை.
அம்மாவுக்கு உதவாமல்
மாந்தோப்புகளில் விளையாடினேன்.
நதியைப் படைக்க முடியாத நான்
அதில் திளைத்து நீந்தினேன்.
என்ன படைப்பாளி நான்?
லூர்துநாதனின் குண்டடியை
அருகிலிருந்துதான் பார்த்தேன்.
ஸ்டெர்லைட் மரணங்களைத்
தொலைக்காட்சியில் கண்டேன்.
ஆனால் புறாக்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறேன்.
ஒரு புல்லை வானத்தை
மேகங்களை நீரில் திளைக்கும் மீன்களை
எதையும் நான் படைத்ததில்லை.
பிறகென்ன படைப்பாளி நான்
என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள்?
புறாக்களுக்குச் சமர்ப்பணம்
புகார்களோடு அலைகிறாய்.
சமயங்களில் - <