மதிப்பீடு: காலமும் களமும்
மதிப்பெண்கள் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாகும் காலம் இது. பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் நகல் பெறுவதும் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோருவதும் பரபரப்பாக நடக்கும். பலருக்கு மறுகூட்டலைவிட மறுமதிப்பீடு ஆபத்தானது என்பது தெரிவதில்லை. ஏதோ தாங்கள் நினைக்கும் ஒரு கேள்விக்கு மட்டும் மறுமதிப்பீடு செய்வார்கள் என்பது அவர்கள் எண்ணம். மறுமதிப்பீடு கோரினால் அனைத்து விடைகளும்தான் பரிசீலனைக்கு உள்ளாகும். சொல்வார் பேச்சைக் கேட்டு விண்ணப்பித்து ஏற்கெனவே பெற்றிருந்த மதிப்பெண்களை விடக் குறைந்துபோகும்போது வருத்தப்படுவர்.
மதிப்பீட்டுப் பணி, கற்பித்தல் பணியைவிட கவனத்தோடும் அக்கறையோடும் மேற்கொள்ளப்பட வேண்டியது. இது, மாணவக் குழந்தையின் உயர்கல்வியை / பணிவாய்ப்பை நிர்ணயிக்கும், வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும். காலம் மாறமாற இப்பணியின் முக்கியத்துவமும் புறவயத்தன்மையும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளானவையாக இருக்கின்றன.
<img sty