பள்ளிக் கட்டமைப்பும் சனநாயகமும்
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நிகழ்வுக்குப் பின்னர்தான் பள்ளிக் கட்டமைப்புப் பற்றிய விவாதம் தீவிரமாக நடந்தது. அப்போதும் கூட அது பள்ளி மேற்கூரை குறித்தான விவாதமாக முன்னெழுந்து சுருங்கி விட்டது. கீற்று ஓலைகளுக்குப் பதிலாக ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்தாலே பள்ளிக்கான அபாயங்கள் நீங்கிவிடும் என்ற முடிவுக்கு வந்தது அரசு.
வீடு என்பது வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல என்ற முதுமொழி பள்ளிகளுக்கும் பொருந்தும். மாணவர்கள் ஒருநாளின் பெரும்பான்மையான நேரங்கள் பள்ளிகளிலேயே வாழ்கின்றனர். எனவே மாணவர்களின் பெரும் பகுதி வாழ்க்கைக்கு ஓர் இல்லமாய்த் திகழும் அந்தப் பள்ளிகளில் அகக்கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மாணவர்களின் இன்றியமையாத் தேவைகளையேனும் நிறைவு செய்யும் வகைகளில் பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளதா?
<img style="width: 80%;" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c2988