3 நுண்கதைகள்
ஆப்பிள் வாழ்வு
“அது ஒரு சலிப்பான காலம்” ஆப்பிளில் வாழும் பெண் அவளுடைய கதையை இப்படி தொடங்கினாள்.
ஆப்பிளை இரண்டு துண்டுகளாக நறுக்கும் போது, அதிலிருந்து எப்போதும் தப்பியோடும், அழகிய பிருஷ்டம் கொண்ட நிர்வாணப் பெண்ணைப் பிடிப்பதற்கு, என்னுடைய பதின் வயதிலிருந்தே முயற்சிசெய்திருக்கிறேன். ஒரு பறவையைப் போல், கையில் அகப்படாமல் அவள் எப்போதும் தப்பித்து வந்தாள்.
ஆனால், கடற்கரையில் தன்னுடைய கேடிஎம் பைக்கில் சாய்ந்து நின்றவாறு ஓர் இளைஞன் ஆப்பிளை நறுக்கியபோது, அதிலிருந்து தப்பி ஓடி வந்தவளைச் சுலபமாகப் பிடித்தேன்.
அந்த இளைஞன் நறுக்கிய பாதி ஆப்பிளை, அவனுடைய காதலியிடம், “ஜிலீவீs வீs ணீ நீutமீ ஜீussஹ்” என்று சிவந்த தோல் பகுதியையும், பிளந்த விதைகள் பகுதியையும் திரும்பத்திரும்பக் காட்டி, அவளை வெட்கமுறச் செய்து கொண்டிருந்தபோது, அதைத் திரும்பித் திரும்