ஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்
“நினைவுகள் மனித வாழ்வின் தொகுப்பு. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் மகிழ்ச்சி, பாராட்டு, பெருமை என ஏதோ ஓர் உணர்வு பதிந்திருக்கிறது. நீங்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதும் பிடித்தவருடன் பொழுதைக் கழிப்பதும் மகிழ்ச்சியைக் கொடுப்பவையே. ஆயினும், அதை என்றென்றைக்கும் தக்க வைத்திருப்பது இன்பம் தொனித்த நினைவுகள்தாம் . அப்படியான நினைவுகளை வேண்டியமட்டும் நீங்கள் இங்கே தெரிவுசெய்து கொள்ளலாம்” என்றது அந்த நினைவு வங்கியின் ஆறாம் தளத்திலிருந்த ஓர் இயந்திர ராணி. அவ்வறையில்தான் நான் அமர்ந்திருந்தேன்.
என் முறைக்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. வங்கியின் வாடிக்கையாளர் காத்திருப்பு நூலகத்திலிருந்து வருவித்த கதைப் புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடித்திருந்த நிலையில், மீதமிருந்த நேரத்தைக் கழிப்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அறிதிறன்பேசியின் இணையவழியினூடாக அலைந்து திரிந்து திக்கற்றுப்போக எனக்கு விருப்பமில்ல