பாதசாரி
கடிகை
சுவர்க்கடிகையில்
விநாடி முள் அதிவேகமாக ஓடினால்
இரைப் பையில் அமிலச் சுரப்பு
விரிந்த புத்தகத் தாள் வரிகளூடே
எழுத்துக்கள் இடறிப் பதறி விரையும்
நுண்ணுருப் பூச்சியாக
உடலினுள் உயிர்க் கடிகை நடுங்குது...
நேர முள்ளும் வேண்டா... நிமிஷ முள்ளும் வேண்டா
நொடிமுள்ளும் வேண்டா
முள்ளும் எண்ணும் இல்லாக்
கடிகை தா காலபைரவா
மலர்
உழைப்பும் களிப்பும் ஒரே செயலாய்
சுழன்றோடித் திசைப் பருகும்
வேரின் சுவாசம்
அதன் வெளியில்
உயிரின் ஆனந்த லயமாய் மலர் மலர் மலர்
பற.. பற..
எதையோ மறந்தேன் எதை
மறந்தேன் என்பதையே
மறந்தொரு வாழ்வு முடிவாக
வாழ்ந்தேன் எனச் சுட்டிச் செல்ல
சொல் எதுவும் தங்காது போல
மொழியே நிலமென இங்கே
சும்மா அலைந்தவன்
விதை