புதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்
தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையராகப் பதவி வகிக்கும் திரு.த.உதயசந்திரன் மிக இளம்வயதில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வானவர். மாவட்ட ஆட்சியராகவும் பல்வேறு துறைகளுக்குச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். ஒவ்வொரு பணியிலும் சமூக முன்னேற்றம் நோக்கிய பார்வையுடன் அரசுத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் புதிய திட்டங்களை வகுப்பதிலும் முழுக் கவனத்தையும் செலுத்தித் தம் பதவிக்கு மதிப்பை உருவாக்கியவர். பள்ளிக் கல்வித்துறைச் செயலராகப் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பில் கடந்த ஓராண்டாகச் செயல்பட்டார். புதிய பாடத்திட்டம் பல தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பன்முக உரையாடலை உருவாக்கியது. அவர் பள்ளிக் கல்விச் செயலராக இருந்த போது 14-07-18 அன்று எடுத்த நேர்காணல் இது:
<img style="width: 25%;" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298