ஜனவரி 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேர்களை அறுக்க முடியாது
      பேக்கரிக்காரரே, பேக்கரிக்காரரே, எனக்காக ரொட்டி சுடுங்களேன்...
      ஓமைக்ரானை வரவேற்கலாமா?
      நோயச்சத்தில் கல்வி முன்னும் பின்னும்
      கல்வியைத் தொற்றிய கொரோனா
      கல்வி இனி?
      அழிவின் தொடக்கத்தில்
      தமிழ் சினிமா எனும் மாமத யானை
      நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
      மகாராஜா வீழ்த்தப்பட்ட கதை
      கெம்பின்ஸ்கி ஹோட்டல்
      உள்ஒதுக்கீடு 10.5% உயர்நீதிமன்றச் செய்தி என்ன?
    • கதை
      நான் கொன்ற பெண்
      நிலவுண்ணும் மண்
      அத்தாட்சி
      ஈர்ப்பு விசை
    • சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
      இயற்கையும் எழுத்தும்
      நம் காட்டுயிர்: சீரழிக்கப்பட்ட பாரம்பரியம்
      கிருஷ்ணனும் அவர் காமிராவும்
      மகராசாவின் வெள்ள நாக்குட்டி
      கிருஷ்ணனின் செய்தி
    • உரையாடல் : கணேஷ் தேவி-டேவிட் ரீச்
      நாம் ஹரப்பனின் குழந்தைகள்
    • பத்தி
      கடைசிப் பக்கங்கள்
    • புத்தகப் பகுதி
      எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்?
      சுகிப்பும் எதிர்ப்பும்
      உண்மையான காதலன்
      தமிழும் அறபும்
    • வினோத் துவா (1954 - 2021)
      காட்சி ஊடகத்தின் முதல்வர்
    • 25 (1996 - 2021) ஆண்டுகள்
      25 (1996 - 2021) ஆண்டுகள்
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ஊடகம் - அரசு - நீதி
    • அசாமியக் கவிதைகள்
      சற்று முன்பு நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
    • ஞானபீட விருதுகள்
      நீல்மணியும் மாஸோவும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2022 தலையங்கம் ஊடகம் - அரசு - நீதி

ஊடகம் - அரசு - நீதி

தலையங்கம்

இந்திய முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் கடந்த 2021 டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த வான்விபத்தில் உயிரிழந்தார். அவரது  மனைவி உட்பட பதின்மூன்று பேரும் விபத்தில் பலியானார்கள். நாட்டை உலுக்கிய கொடும் விபத்து இது. 

விபத்தைப் பற்றிப் பிரபலங்களும் பொதுமக்களும் சமூக வலைத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். ‘பிரபல’ யூடியுப் பதிவரான மாரிதாசும் பதிவிட்டிருந்தார். ‘விபத்துக்குக் காரணம் சதிவேலை. ‘திமுக ஆட்சியில் தமிழகம் மற்றொரு காஷ்மீராக மாறிக்கொண்டிருக்கிறது. நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்கள் மாநிலத்தில் தீட்டப்படுகின்றன’ என்று கூறியிருந்தார். இந்தப் பதிவின் அடிப்படையில் மாரிதாஸ்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்மீது தேசத்துரோகம், சமூக நல்லிணக்கத்தைக் குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் நோக்கம் ஆகிய குற்றப் பிரிவுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டது. கூடவே அவர்மீது பதிவான பழைய வழக்குகளின்பேரிலும் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்; தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மாரிதாஸ் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அரசின் நடவடிக்கை, ஊடகங்களின் பொறுப்பு, நீதிமன்றச் செயல்பாடு தொடர்பான வினாக்களை முன்வைக்கிறது. ஜனநாயக அமைப்பில் கருத்துச் சுதந்திரத்தின் நிலைபற்றிய விவாதத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.

“தமிழக அரசு திட்டமிட்டே மாரிதாசைக் கைது செய்தது. கைதுக்கு முகாந்திரமான குற்றத்தைச் சுட்டிக் காட்டும் முதல் தகவல் அறிக்கை அளிக்கப்படவில்லை, பிணையில் வெளிவர முடியாத வழக்கில் உட்படுத்தப்பட்டார்” என்று மாரிதாஸ் தரப்பினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர் இழைத்ததை அவதூறு பரப்பும் குற்றச் செயலாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

மாரிதாஸ் தொடர்ந்து தரக்குறைவான கருத்துகளையும் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளையும் பதிவேற்றி வருவது கண்கூடு. இந்த அவதூறுச் செயல்களுக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுவதில் பிழையில்லை. ஆனால் திமுக அரசை விமர்சிக்கும் விதமாகப் பதிவேற்றியதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மத்திய அரசு தனக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்களுக்குப் பாடம் கற்பிக்கப் பயன்படுத்தும் அதே ஆயுதத்தைத் தமிழக அரசும் கையாண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் சகிப்பின்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக அரசும் அதே வழியில் செல்வது கருத்துச் சுதந்திரத்துக்கு இணக்கமானது அல்ல. இச்சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று மனித உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். இத்தகைய ஒரு சட்டத்தைக் கையாள்வதை முற்போக்கான பார்வையுடன் இயங்கிவரும் திமுக அரசு தளர்த்தியிருக்க வேண்டும். அரசியல் காழ்ப்பின் பேரில் எவர்மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
மாரிதாஸின் பதிவுலகச் செயல்கள் அவதூறானவையா, கிரிமினல் நோக்கம் கொண்டவையா எனச் சட்டத்தின் வழியேதான் தீர்மானிக்க முடியும். அவரது அவதூறுக் கருத்துகளை ஊடகங்கள், கிரிமினல் குற்றங்களாக ஊதிக் காட்டுகின்றன. இந்தச் செயல் ஊடகங்களுக்கு எதிராகவே திரும்பும் அபாயமும் உள்ளது. ஊடக நிறுவனங்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திப் பல ஊழியர்களின் பணிநீக்கத்துக்கும், அதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் மாரிதாஸ் உலைவைத்திருக்கிறார். ஆகவே அவரது கைதை ஊடகப் பணியாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார்கள். இது ஊடக – நிறுவனங்களில் நடைபெறும் ‘காலை வாரும் கைங்கரியத்தை’ ஒத்தது இல்லையா? ஊடகங்கள் அளிக்கும் செய்திகளிலும் தகவல்களிலும் காட்ட வேண்டிய பொறுப்பை ஊடகங்கள் பணிச் சூழலிலும் பின்பற்ற வேண்டிய தேவையை இது சுட்டிக் காட்டுகிறது.

மாரிதாஸ் மீதான தேசத்துரோக வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை இருக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்குப் பின் வழக்கைத் தள்ளுபடி செய்தார். மாரிதாஸின் பதிவு முதிர்ச்சியற்ற ஒன்று என்று குறிப்பிட்டார். அப்படிக் குறிப்பிடுவதற்கான காரணங்களை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 51ஏ பிரிவின்படி எடுத்துக்காட்டியும் இருந்தார்; அந்தத் தீர்ப்புக்காகவே ஏளனத்துக்கும் விமர்சனத்துக்கும் இலக்கானார். இதே சட்ட அடிப்படையிலான  சான்றுகளை  முன்வைத்துக் கருத்துச் சுதந்திரத்துக்கு  ஆதரவாகப் பல வழக்குகளில் தீர்ப்பளித்தவர் அவர் என்ற உண்மை வசதியாக மறக்கப்பட்டது.

ஊடகங்களைப் பொதுச் சமூகம் கையாளும் விதத்திற்கும் மாரிதாஸ் விவகாரம் உதாரணம். அச்சிதழ்கள், தொலைக்காட்சி போன்ற தொடர்புச் சாதனங்களின் பங்கை இன்று சமூக ஊடகம் எடுத்துக்கொண்டிருக்கிறது. முன்னவற்றில் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருந்தன. சமூக ஊடகங்கள் கட்டற்ற சுதந்திரத்தைக் கொண்டிருப்பவை.  மிகப் பரந்த ஜனநாயக வெளியைக் கொண்டவை. அந்தச் சுதந்திரத்தையும் ஜனநாயக உணர்வையும் தவறாகப் பயன்படுத்துபவர்களில் ஒருவர் மாரிதாஸ். ஆனால் அவர் மட்டும்தானா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வது கருத்துச் சுதந்திரம் குறித்த மேம்பட்ட புரிதலுக்கு உதவலாம்.

திமுக அரசு பதவியேற்ற சில நாட்களுக்குள் இதே போன்ற குற்றச் சாட்டின் பேரில் இணையப் பதிவாளர் கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டார். அதை சுட்டிக்காட்டிச்  இதழ் எண் 261 செப்டம்பர் 2021 தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:

இணையத்தில் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்த கிஷோர் கே. சுவாமியின் மீதான புகார்களின் பேரில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது திமுக அரசு. கிஷோர், இணையத்தில் உலாவும் தரங்கெட்ட ரவுடிகளில் ஒருவர் என்பதில் ஐயமில்லை. அவர் திமுக தலைவர்களுக்கு எதிராகவும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராகவும் ஆபாச அவதூறு வசைகளைத் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் வலுவாகவே இருக்கிறது. ஆனால் அவர் திமுக தலைவர்களைத் தரக்குறைவாக வசைபாடியதற்காகத்தான் இந்த அரசு அவரைக் கைதுசெய்திருக்கிறது. சாதாரண மக்கள், குறிப்பாகப் பெண்கள்மீது அவர் கொட்டிய அவதூறுக் குப்பைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. தவிர, அவர்மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் அரசியல் எதிரிகள் மீது ஏவுவதற்காகவே பயன்படுத்தப்படுவதாகும். இதை வைத்து யாரையும் மிரட்டலாம் என்பதால் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மாறாக, குடிமையியல் (சிவில்) அவதூறுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நெடுங்காலமாகக் கோரிவருகிறார்கள். கிஷோர் போன்ற ஒருவருக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தாலோ அல்லது அதைப் பாராமுகமாக இருந்துவிட்டாலோ நாளை அரசியல் காழ்ப்பிற்காகவே இந்தச் சட்டத்தை வேறொருவர்மீது பிரயோகிக்கும்போது அதை எதிர்ப்பதற்கான நியாயத்தை நாம் இழந்துவிடுவோம்.

இந்த வாசகங்கள் இன்று மாரிதாஸ் விவகாரத்திலும் துல்லியமாகப் பொருந்தும்.

சமூக வலைத்தளங்களை அதிகாரம் என்னவாக எதிர்கொள்கிறது என்பதற்கான சமீபத்திய சிறந்த உதாரணம் இது.

மதுரையைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிப் பிரமுகர் மதிவாணன் தமது குடும்பத்தினருடன் சிறுமலைக்குச் சென்றார். மலையுச்சியில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டார். அதற்கு அவர் கொடுத்த குறிப்பு ‘ஷூட்டிங் பயிற்சிக்காகச் சிறுமலைப் பயணம்.’ அதைப் பார்த்த வாடிப்பட்டி காவல்துறையினர் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அவரைக் கைது செய்திருக்கின்றனர். மாநில அரசின் மீது தாக்குதலுக்கு ஆயத்தம் செய்கிறார் என்பது அவர்மீது பதியப்பட்ட வழக்குக்கான காரணம். மாரிதாஸ் வழக்கைத் தள்ளுபடி செய்த அதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே வழக்கை விசாரித்தார். ‘சிரிப்பது கடமை என்று சட்டபூர்வமாக்குமாறு நமது அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படும் காலம் நெருங்கிவிட்டது’ என்றும் கூறியிருக்கிறார்.

நமது சட்டங்கள் சிரிப்புக்குரியனவாக நடைமுறைப் படுத்தப்படுவது  கருத்துச் சுதந்திரத்துக்கும் ஜனநாயக உரிமைக்கும் விடப்படும் அறைகூவல். அதை மாரிதாசும் அவரை முன்னிருத்தி அனைவரும் செய்து கொண்டிருப்பது நகைப்புக்குரியதல்ல, வேதனைக்குரியது.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.