ஈர்ப்பு விசை
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன்
புதிதாக வாங்கிய அடுக்ககக் குடியிருப்பில் அவர்கள் குடியேறிய மூன்றாவது நாள் எட்டாவது தளத்தில் வசித்துவந்த பெண் சன்னலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள். அவள் கட்டடத்தின் வெளிப்பாதையில் விழுந்தபோது சற்றுத் தள்ளியிருந்த காபி ஷாப்பிலிருந்து ரோமி இரண்டு கோப்பைகளோடு திரும்பி வந்துகொண்டிருந்தாள். ரோமியின் கையிலிருந்து தட்டு கீழே விழுந்து, காபி மேலெங்கும் சிதறியது. அணிந்திருந்த தளராடைமீது பரவிய காபிக் கறைமீதுதான் அவளுடைய பார்வை இருந்ததேயொழிய வேறு எதையும் அவள் அப்போது கவனிக்கவில்லை. பலரும் ஓடிவருகிற, மூச்சிரைக்கிற, கத்துகிற சத்தங்கள் அவள் செவிகளில் விழுந்தன. நொடிநேரத்தில் கூட்டம் கூடியது. வாசல் பெருக்கும் துப்புரவாளன் ஆம்புலன்ஸை அழைத்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின்