நான் கொன்ற பெண்
நான் கொன்ற பெண்
கன்னடத்தில்: ராகவேந்த்ர காசநீசா
தமிழில்: கே. நல்லதம்பி
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
நீங்கள் இப்படி என்னிடம் வந்து அன்புடன் என் உடல்நலனை விசாரிப்பது உங்கள் நல்ல குணத்தைக் காட்டுகிறது, வக்கீல் சார்! அதற்காக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். உங்கள் வழக்கு தோற்கும் என்று தெரிந்திருந்தாலும், கட்சிக்காரனின் வாக்குமூலம் ஏமாற்றமாக இருந்தாலும், அப்படியான துரதிருஷ்டமான கட்சிக்காரனின் விஷயத்தில் உங்களைப்போல யார் அக்கறை காட்டுவார்கள்? பாருங்கள்! உங்கள் மனத்தைச் சந்தோஷப்படுத்தவாவது உண்மை நிலவரத்திற்குப் பதிலாக ஒரு நம