
அழிவின் தொடக்கத்தில்
எங்களூரில் புகழ்பெற்ற தேவாலயம் ஒன்றிருக்கிறது. அவ்வாலயத்தின் மையப் பீடத்தின் மேல் கனிவே உருவான இயேசுவின் சிலையும் இருந்தது. இடக்கையை மார்பில் வைத்துக்கொண்டு, வலது கையைச் சற்றே மேலுயர்த்தி மற்ற விரல்கள் மூடியிருக்க நடுவிரலும் ஆட்காட்டி விரலும் மட்டும் மேல் நோக்கித் திறந்திருக்கும் சிமிண்ட் சிலை. 1990களின் இறுதியில் அதிகாரப்பூர்வமற்ற ஒரு கருத்து அப்போது வயதால் சிறியவர்களாயிருந்த எங்களிடமும், மனதால் சிறுவர்களாயிருந்த பெரியவர்கள் சிலரிடமும் பரவியிருந்தது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூடுமிடங்களிலெல்லாம் அக்கருத்தே ரகசியமாக விவாதிக்கப்பட்டது. “2000 பிறக்குறப்ப உலகம் அழிஞ்சுரும், அதான் நம்ம கோயிலுல இயேசு சாமி விரல அப்படி வச்சிருக்கிறாரு” என்று உலகம் அழியப்போவதற்கான ஆதாரமாகச் சிலையின் இரண்டு விரலைக் காட்டினார்கள்.
2000ஆவது ஆண்டும் பிறந்தது. உலகம் அழியுமென்ற நம்பிக்கையாளர்கள் இந்த வருசம்