ஜனவரி 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேர்களை அறுக்க முடியாது
      பேக்கரிக்காரரே, பேக்கரிக்காரரே, எனக்காக ரொட்டி சுடுங்களேன்...
      ஓமைக்ரானை வரவேற்கலாமா?
      நோயச்சத்தில் கல்வி முன்னும் பின்னும்
      கல்வியைத் தொற்றிய கொரோனா
      கல்வி இனி?
      அழிவின் தொடக்கத்தில்
      தமிழ் சினிமா எனும் மாமத யானை
      நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
      மகாராஜா வீழ்த்தப்பட்ட கதை
      கெம்பின்ஸ்கி ஹோட்டல்
      உள்ஒதுக்கீடு 10.5% உயர்நீதிமன்றச் செய்தி என்ன?
    • கதை
      நான் கொன்ற பெண்
      நிலவுண்ணும் மண்
      அத்தாட்சி
      ஈர்ப்பு விசை
    • சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
      இயற்கையும் எழுத்தும்
      நம் காட்டுயிர்: சீரழிக்கப்பட்ட பாரம்பரியம்
      கிருஷ்ணனும் அவர் காமிராவும்
      மகராசாவின் வெள்ள நாக்குட்டி
      கிருஷ்ணனின் செய்தி
    • உரையாடல் : கணேஷ் தேவி-டேவிட் ரீச்
      நாம் ஹரப்பனின் குழந்தைகள்
    • பத்தி
      கடைசிப் பக்கங்கள்
    • புத்தகப் பகுதி
      எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்?
      சுகிப்பும் எதிர்ப்பும்
      உண்மையான காதலன்
      தமிழும் அறபும்
    • வினோத் துவா (1954 - 2021)
      காட்சி ஊடகத்தின் முதல்வர்
    • 25 (1996 - 2021) ஆண்டுகள்
      25 (1996 - 2021) ஆண்டுகள்
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ஊடகம் - அரசு - நீதி
    • அசாமியக் கவிதைகள்
      சற்று முன்பு நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
    • ஞானபீட விருதுகள்
      நீல்மணியும் மாஸோவும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2022 சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள் கிருஷ்ணனும் அவர் காமிராவும்

கிருஷ்ணனும் அவர் காமிராவும்

சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
சு. தியடோர் பாஸ்கரன்

நம் நாட்டில் காட்டுயிர்களைப் படம்பிடித்த முன்னோடிகளில் ஒருவர் கிருஷ்ணன். அவரது சமகாலத்தில் வாழ்ந்த சிலர் வன உயிரினங்களை சாகச வேட்டை என்ற பெயரில் சுட்டு வீழ்த்தி, தோலையும் தலையையும் பாடம் செய்து சுவரில் மாட்டிக்கொண்டதுடன், படமும் பிடித்தனர். அவர்கள் விட்ட சரடுகளே இயற்கை வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் காமிராவை மட்டுமே கையில் எடுத்தவர் கிருஷ்ணன். இவர் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டதே 1940இல் தான். இந்தக்கலையைத் தானே கற்றுக்கொண்டு, சீக்கிரமே அதில் விற்பன்னர் ஆனார். அதிலும் காட்டில் வாழும் யானைகளையும் கழுகுகளையும் அவற்றின் வாழிடத்தில் பதிவு செய்தார். காட்டுயிர்ப் பேணலுக்கு புகைப்படக்கலை பங்களிக்கக் கூடும் என்று நம்பினார்.

“ஒவ்வொரு இறகும் ஒவ்வொரு மயிரும்” என்பது அவரது ஒளிப்படக் கொள்கை. படங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். கையில் எளிதாகப் பிடித்துப் படமெடுக்கக்கூடிய காமிராக்கள் வருவதற்கும் முன் இந்தத் துறையில் ஈடுபட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது 35mm ஃபிலிம் சுருள்களுக்கு முற்பட்ட காலம். காமிராவும் ஃபிளாஷ் போன்ற உதிரி பாகங்களும் அன்று வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட வேண்டியிருந்தன. அதுமட்டுமல்ல, ஒவ்வொருமுறை படமெடுக்கும்போதும் ஒரு ஃபிலிம் சட்டம் (frame) பயன்படுத்தப்படும். ஃபிலிம் பிரச்சினையே இல்லாத நம் காலத்தில் டிஜிட்டல் காமிரா பயனாளிகளுக்கு இதை உணருவது சிரமமாயிருக்கலாம். டிஜிட்டலோ, வேறு ஏதோ ஒரு காமிராவோ, அதன் சிறப்பு அம்சம் அது உருவாக்கும் பிம்பம்தான். அது எந்தக் கோணத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது, ஒளி எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றது என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர் எழுதினார் “ The lens does not see like the eye. But you should make the lens see like the eye.” இங்கு முக்கியமான சொல், பார்வை. ஒவ்வொரு படமும் அதை எடுத்தவரின் பார்வையைக் காட்டுகின்றது. கிருஷ்ணனின் படங்கள் இதற்குச் சான்றுகளாக உள்ளன. ஒவ்வொரு படமும் உயிர்ப்புடன் இருப்பதைக் காணலாம்.

எடுத்த படங்களைத் தானே உருத்துலக்கி அச்சிடுவார். இதற்கென வீட்டில் ஓர் இருட்டறையை உருவாக்கி வைத்திருந்தார். அங்கு அவர் வேலைசெய்வதைக் கூட இருந்து நான் கவனித்தது உண்டு. ஒளிப்படக்கலையில் பாதி வேலை இருட்டறையில்தான் என்பார். சில லென்சுகள், சில பாகங்கள் இவற்றை வாங்கி, அவரே ஒரு காமிராவை உருவாக்கி அதற்கு பாண்டரோசா ( Ponderous பெரிய) என்று பெயரிட்டிருந்தார். தோல் வார்களால் இணைக்கப்பட்டிருந்த இந்த காமிராவை, கழுத்தில் மாட்டிக்கொண்டு, அசைவில்லாமல் இருக்க அதை இரு கைகளாலும் நெஞ்சில் அழுத்திப்பிடித்துக்கொண்டு படமெடுப்பார். இவர் என்றுமே ஸ்டேண்ட் பயன்படுத்தவில்லை. பெருவாரியான படங்களை ஜீப்பிலிருந்தும் யானைமீதும் அமர்ந்து படமெடுத்தார். Photography from elephant back என்ற கட்டுரையை இவரால்தான் எழுத முடியும்

தென்னிந்திய உயிரினங்களைப்பற்றி An Ecological Survey of the Large mammals of Peninsular India என்ற தலைப்பில் ஆய்வு செய்ய அவருக்கு ஜவஹர்லால் நல்கை கிடைத்த போது, அவரது பணிக்கு ஒளிப்படக்கலையை வெகுவாகப் பயன்படுத்தினார். காட்டுயிர்களைப் புரிந்து கொள்வதற்கு ஒளிப்படம் உதவும் என்று நம்பினார். காட்டில் இயல்பாக இருக்கும் விலங்குகளின் நடத்தையைக் காட்டும் வண்ணம் படமெடுத்து, அவற்றைத் தனது களஅவதானிப்பிற்குச் சான்றாகப் பயன்படுத்தினார். காட்டில் ஓர் உயிரினத்தின் செயல் எதிர்பாராததாயிருக்கலாம். அதைப் பார்த்தவர் சொன்னால்கூட மற்றவர்கள் நம்பமாட்டார்கள். படம்பிடித்துக்காட்டினால் அது ஆவணமாகும். அறிவியல் ஏற்றுக்கொள்ளும்; மக்கள் நம்புவார்கள். திருக்குறுங்குடியருகே உள்ள ஏரிக்கரையில் ஒரு நாரை நீர்வாத்து (சிறகி) ஒன்றைப் பிடித்து விழுங்கியதை பைனாகுலரில் கவனித்த நண்பர் ஒருவர் என்னிடம் அதைப்பற்றிக் கூறினார். இது இருபது ஆண்டுகளுக்கும் முன். இன்று அத்தகைய காட்சியைப் படம்பிடித்து விடலாம். 

காமிராவின் பார்வை பாரபட்சமற்றது, ஆகவே உண்மையாக இருக்கும் என்பது கிருஷ்ணனின் வாதம். ஆய்வாளர் களத்தில் பார்க்கத் தவறிய சில காட்சிகளை காமிரா பதிவுசெய்து காட்டிவிடும். ஆனால் ஒன்று. உயிரினங்கள் சுயேச்சையாக, தமது வாழிடத்தில் இருக்க வேண்டும். இவரது படங்களையும் கட்டுரைகளையும் 1972 - 73 ஆண்டுகளில் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக சஞ்சிகை (Journal of the Bombay Natural History Society) வெளியிட்டது . இந்தத் தொகுப்பு ஒரு நூலாக India’s Wildlife என்ற தலைப்புடன் வெளிவந்தது. பம்பாயிலிருந்து வெளியான The Illustrated Weekly of India இதழில் The South Indian Diary என்ற பத்தியை ஒவ்வொரு வாரமும் இரண்டு படங்களுடன் தொடர்ந்து எழுதினார். காட்டில் அவரது அனுபவங்களை ஒளிப்படம், எழுத்து என்னும் ஊடகங்கள் மூலம் தனது வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அத்துடன் அவ்வப்போது அவர் கோட்டோவியங்களையும் சேர்த்துக்கொண்டார். அவருடைய ஒளிப்படங்களைக்கொண்ட இரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

வெளிமான். இந்திய உபகண்டத்தில் மட்டுமே உள்ளன. கலைமான் என்றும் அறியப்படும். கோடிக்கரை, வல்லம் முதலிய சரணாலயங்களில் வாழ்கின்றன. அதிவேகமாக ஓடக்கூடிய விலங்கு. இதன் கொம்பு மனிதர்களால் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

 

 

இந்தியாவில் சுமார் 27,000 யானைகள் வாழ்வதாகக் கணிப்பு. ஆசிய யானைகள் அதிகமாக இருக்கும் நாடு நம்நாடுதான். அதிலும் பெருவாரியானவை மேற்குத்தொடர்ச்சி மலைகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. பெரியார் சரணாலயத்தில் இந்த மந்தை.

கான்ஹா சரணாலயத்தில் பாராசிங்காமான். நம்மூர் கடமான் போன்ற இவ்விலங்கு பன்னிரண்டு கொம்புகளை உடையது. எனவே பாராசிங்கா எனப் பெயர்பெற்றது. காசிரங்கா தேசீயப்பூங்கா இதன் மற்றொரு வாழ்விடம். அரியவகை விலங்கு.

 

 

நம் நாட்டின் தேசிய விலங்கான வேங்கைப்புலி காட்டுயிர்ப் பேணலுக்குக் குறியீடாக இருக்கின்றது. நாட்டில் இன்று சுமார் 3000 வேங்கைப்புலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆனைமலை, முதுமலை, களக்காடு முண்டந்துறை முதலிய சரணாலயங்களில் வாழ்கின்றன. 

காட்டெருமை. சதுப்பு நிலக்காடுகளில் வாழும். நீண்டுவளைந்த கொம்புகள் இதன் முக்கிய அடையாளம். காசிரங்கா, ஜல்தப்பாரா, மானஸ் சரணாலயங்களில் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

காட்டுமுயல்.  புதர்க்காடுகளில் வசிக்கும் இது இறைச்சிக்காக வெகுவாக வேட்டையாடப்பட்டது. எனினும் இது வேகமாகப் பலுகிப்பெருகுவதால் இன்று எண்ணிக்கையில் நிறைய இருக்கின்றன. 

காட்டுமாடு.   உலகிலேயே உருவில் பெரிய மாட்டினம்.  ஆனைமலை, முதுமலை, பந்திப்பூர் போன்ற தென்னிந்திய சரணாலயங்களில் இவை கூட்டம் கூட்டமாகச் செழித்து வாழ்கின்றன. இவை எருமை இனமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

லாங்கூர் மந்தி. கருத்த முகமும் நீண்ட வாலும் கொண்ட இந்த மந்திகளை இந்தியா முழுவதிலும் காடுகளில்  காணலாம். 

காண்டாமிருகம். நூறாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய அற்றுப்போய்விட்ட இவ்விலங்கு தீர்க்கமான பாதுகாப்பால், சிறப்பாக 1905இல் கர்சன் பிரபு காசிரங்காவிற்கு வந்தபின், பாதுகாப்பு அளிக்கப்பட்டு இது  பிழைத்திருக்கின்றது. இன்று கிழக்கு இந்தியாவில் நான்கு சரணாலயங்களில் ஆயிரத்திற்கும்மேல் வாழ்கின்றன.

பெட்டையும் குட்டியும். மிளா, கடமான் என பல பெயர்களில் அறியப்படும் சாம்பர் மான். இந்தியாவில் உருவில் பெரிய மானினம். சிறு மந்தைகளாக வாழும்.வேங்கைப்புலிக்கு முக்கியமான இரை இது. 

சங்குவளை நாரை, பவளக்கால் நாரை, மஞ்சள்மூக்கு நாரை என்று பல பெயர்களால் அறியப்படும் இப்பறவை ஓர் உள்ளூர் உயிரினம். கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற காப்பிடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு பறவை எங்கு இனப்பெருக்கம் செய்கின்றதோ அது அந்தப் பகுதியைச் சேர்ந்தது.

ஆசியாவில்  ஆண் யானைக்கு மட்டுமே கொம்பு (தந்தம்)  உண்டு.  கொம்பில்லாத ஆண் யானைகளும் உண்டு 
அவற்றை மக்னா என்று குறிப்பிடுவர்.

 

 

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.