
கெம்பின்ஸ்கி ஹோட்டல்
Photo: Hotel Adlon Kempinski
“ஜெர்மனியில் புரட்சியா? நடக்கவே நடக்காது! ஜெர்மனியர்கள் புகையிரத
நிலையத்தினை முற்றுகையிடப் புறப்பட்டால், முதலில் மேடைக்குச் செல்லும் அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டுதான் முற்றுகையிடச் செல்வார்கள்.”
ஜெர்மனியர்களைப் பற்றி மேற்கண்டவாறு லெனின் குறிப்பிட்டதாகச் சொல்வார்கள். ஜெர்மனியர்களது அதீத ஒழுங்கிற்கும் நெகிழ்ச்சியற்ற இயங்குமுறைக்கும் சட்டக் கீழ்ப்படிவிற்கும் எதிரான எள்ளலான கருத்து என்று இதனைக் கொள்ளலாம்.
இரண்டாவது உலகப் போரின்போது சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு மேற்காட்டிய அதீத ஒழுங்கு, ஆவணப்படுத்தல்