ஜூன் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2026
    • கட்டுரை
      “நம் நாடு தனது தார்மீக நெறியை இழந்துவிட்டது”
      புனைவில் இசைக்கப்படும் விடுதலை
      ஹெமிங்வேயைத் தொடரும் போர்ஹே
      தமிழ்ப் பல்கலைக்கழகம் வீழ்ந்துகொண்டிருக்கும் பதிப்புத்துறை
      இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
    • கதை
      மயானக் கொள்ளை
      தாழொடு துறப்ப
      வெள்ளைச் சீலை
    • திரை: டூரிஸ்ட் பேமிலி
      பெரியண்ணன் கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தவர் கதை
    • காலச்சுவடு 30 & 300
      பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      நம்பினால் நம்புங்கள்!
    • மதிப்புரை
      காலத்தின் குரல்
      பிரபஞ்ச தரிசனம்
      உடல்களின் உலகம்
      பெண் போராளியின் வரலாறு
    • அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025)
      நவீன தொல்குடி மனம்
    • பஹ்தியார் ஹிதாயத் கவிதைகள்
      கண்ணியம்
    • தலையங்கம்
      கனன்றுகொண்டிருக்கும் எரிமலை
    • கற்றனைத்தூறும்- 7
      அனைவருக்கும் கிடைக்குமா கல்வி?
    • புக்கர் பரிசு 2025
      ‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’
    • கவிதை
      உப்பாளன்
      உள்ளிரைச்சல்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2025 கண்ணோட்டம் நம்பினால் நம்புங்கள்!

நம்பினால் நம்புங்கள்!

கண்ணோட்டம்
கண்ணன்

தமிழக நூலகத் துறை வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தை அறிவித்து ஓராண்டிற்குப் பின்னர் முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆணைக்காகப் பல ஆண்டுகள் தவம் இருக்க வேண்டியதில்லை. இப்போதே விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கொள்கையும் ஆணையும் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் பாய்ச்சல் என்பது என் எண்ணம். காலச்சுவடுக்கு வழங்கப்பட்ட ஆணை எனக்கு மனநிறைவளித்ததா என்றால் இல்லை. ஆனால் எனக்கு முழு நிறைவு ஏற்பட வேண்டும் என்றால் காலச்சுவடுக்கு ஆணை வழங்கும் அதிகாரத்தை எனக்கே வழங்கிட வேண்டும்  என்பதும் எனக்குத் தெரியும்!

காலச்சுவடு தொடங்கப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அடிப்படையான முடிவுகளில் ஒன்று நாங்கள் வாசகரை நம்பிச் செயல்படுவோம், நூலக ஆணையை நம்பி அல்ல என்பதுதான். தமிழக அரசு நூலகங்கள், நூலக ஆணைபற்றி நிறையவே எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். அவை நூலகங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற கரிசனத்தில் வெளிப்படுத்தியவை, காலச்சுவடுக்குக் கிடைக்காத ஆணைபற்றிய புலம்பலாக அவை இருந்ததில்லை.

நூலகத் துறையின் நோக்கம் வாசகரின் பொழுதுபோக்கிற்கும் கல்விக்கும் உய்விற்குமான நூல்களைக் கொள்முதல் செய்து வாசிப்பிற்கு அளிப்பதாக இருக்க வேண்டும். அவர்தம் நோக்கம் பதிப்பாளர்களைக் குஷிப்படுத்துவதாக இருக்க முடியாது. முழுவதும் வாசகரை நோக்கியே அவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். பதிப்பாளர்கள் எம்மிடமிருக்கும் வாசகருக்கு அவசியமான, தகுதியான நூல்களுக்கு ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். ஆனால் எல்லாப் பதிப்பாளர்களுக்கும் ஆணையை அள்ளிக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. வாசகரை நோக்கி நூல் வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நூலக ஆணை கூடுதலான ஊக்கத்தைத் தரலாம். ஆனால் நூலக ஆணையை நம்பியே பதிப்பாளர்கள் இயங்கக் கூடாது. எல்லா நூல்களும் 1000 பிரதிகள் ஆணை வேண்டும் என்று கேட்பதில் பதிப்பாளர்களுக்கு லாபம் உள்ளது. வாசகர்களுக்கு அதிகப்படியான தலைப்புகளில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதே பயனுள்ளது.

நூலகத் துறையின் பணம், மக்கள் வரிப்பணம். அது மக்களுக்குப் பயன்படும் விதத்தில் செலவுசெய்யப்பட வேண்டும். பதிப்பாளர்களுக்கு அதைப் பங்குவைத்து வழங்க வேண்டும் என்று கோருவது முறையல்ல.

தமிழக நூலகத் துறையில் ஊழல் இல்லாமல் ஆணை வழங்கப்படும் என்று நம்பிய பதிப்பாளர்கள் யாரும் இல்லை. நானும் நம்பியதில்லை. குறைந்த ஊழல் என்பதே அதிகபட்ச எதிர்பார்ப்பு.

ஆனால் இம்முறை ஆணை வழங்குவதில் நான் அறிந்தவரை ஊழலே நடக்கவில்லை. ஊழலின் இன்னொரு முகமான செல்வாக்கின் ஊடுருவலும் இல்லை. வெளிப்படையான கொள்முதலுக்கான ஒரு செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆணை வழங்கியதும் பதிப்பாளர்களை அழைத்து நூலகத் துறை கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது. இப்படி ஒரு சந்திப்பு இதுவரை நூலகத் துறையில் நடந்தது இல்லை.  இப்போது உருவாக்கப்பட்டுள்ள செயல்முறையின் குறைபாடுகளைக் களைந்து ஆக்கபூர்வமான உரையாடலின் வழி மேம்படுத்த வழிகோலப்பட்டுள்ளது.

நானறிந்தவரை இதுவரை நூலக ஆணை பெறாத பல சிறிய ஆனால் தகுதியான நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு ஆணை கிடைத்துள்ளது. நூலக ஊழலின் மையமாக இருந்தது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களின் கொள்முதல்தான். ஒரே மாவை எத்தனை விதமாகச் சுட்டு விற்க முடியும் என்பதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட மண் இது. இம்முறை இந்நூல்களுக்கு ஆணை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது வரவேற்கத்தக்க முடிவு.

ஊழல் புரையேறி, முடை நாற்றமெடுத்து, நமது நூலகங்களைச் சீரழித்தபோது பதிப்புத் துறையில் மௌனக்கொடியை பறக்கவிட்டவர்கள் இன்று அந்த பொற்காலத்தை வேண்டி விமர்சனங்கள் பதிவிடுகின்றனர்; ஊடகங்கள் வழி பரப்புரை மேற்கொள்கின்றனர்.

எந்த நூலக ஆணைக்கும் இதுவரை கூட்டம் நடத்தாத பபாசி இம்முறை ஆணைபற்றி விவாதிக்கக் கூட்டம் நடத்தியது.

இருப்பினும், நூலக ஆணைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த முறைமை மேம்பட வேண்டும், தொடர வேண்டும் என்பதே அசலான பதிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.