ஹெமிங்வேயைத் தொடரும் போர்ஹே
எர்னேஸ்ட் ஹெமிங்வே
அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆங்கிலச் சிறுகதை ஒன்றை 22 ஆண்டுகளுக்குப் பின் லத்தின் அமெரிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் லுயி போர்ஹே தனது ஸ்பானிஷ் சிறுகதை ஒன்றின் மூலம் தொடர்கிறார்.
பத்திரிகைகளுக்குக் கதைகள்தாம் முக்கியம். ஏனெனில் வாசகர்கள் பிரதானமாகக் கதைப் பிரியர்கள்தாம் என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் வாசகத் தளத்தை விரிவாக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பல உத்திகளைக் கையாண்டார்கள். அவற்றில் ஒன்று ஒரு தொடர்கதையைப் பல எழுத்தாளர்களை வைத்து எழுதவைப்பது. ஒரு நாவலைப் பல எழுத்தாளர்கள் வாராவாரம் ஒருவர் பின் ஒருவராகத் தலா ஒரு அத்தியாயம் எழுதி நிறைவு செய்வார்கள். முதல் அத்தியாயத்தை ஒரு எழுத்தாளர் எழுதுவார். அதைப் படித்துவிட்டு மற்றொரு எழுத்தாளர் அதே நாவலி