நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
சிறப்புப் பகுதி
கருத்துச் சுதந்திரமும் நீதிமன்ற அவமதிப்பும்
நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
அருந்ததி ராய்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் அதிகார வரம்பு அவமதிப்பு மனு (சிஆர்) எண்: 2/2001
பின்வரும் விஷயத்தில்:
ஜே.ஆர். பராசர் மற்றும் பிறர்
எதிர்
ப்ரஷாந்த் பூஷண் மற்றும் பிறர்
பதிலாளர் எண்: 3
தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்
மேரி ராயின் மகளான, 2ஏ கௌடில்யா மார்க், புது தில்லி 110021 என்ற முகவரியில் வசிக்கும் அருந்ததி ராய் என்னும் நான் உண்மையுடன் கீழ்க்கண்டவாறு வாக்குமூலம் அளித்து உறுதிப்படுத்துகிறேன். உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் எனக்குக் கிடைத்தது. இந்த நோட்டீஸ் தரப்பட்டிர