“பாரதிக்குப் பின் பாடாத கவியே நல்ல கவி!”
புகழ்பெற்ற சமகால எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பலருடனான நேர்காணல்கள் ‘இலக்கியச் சந்திப்புகள்’ என்ற தலைப்பில் தீபம் இதழில் 1960களில் தொடர்ச்சியாக வெளிவந்தன. 20-க்கும் மேற்பட்ட இந் நேர்காணல்கள் இலக்கியச் சூழலில் பரவலான கவனத்தைப் பெற்றன. தீபத்துடன் தொடர்பிலிருந்த குறிப்பிட்ட எழுத்தாளர்கள் சிலர் இச்சந்திப்புகளை நிகழ்த்தினர். இவ்வரிசையில் எழுத்தாளர் கு. அழகிரிசாமியுடன் கிருஷ்ண மணி அவர்கள் நிகழ்த்திய ‘இலக்கியச் சந்திப்பு’ (தீபம், நவம்பர் 1966) அழகிரிசாமியின் நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடில் மறு பிரசுரமாகிறது.
இலக்கிய ஆர்வத்துக்கான தூண்டல், சிறுகதை எழுதும் முறை, கல்வித்துறையில் நவீன இலக்கியம், பாரதிக்குப் பிறகான கவிதை, நாட்டுப்புற இலக்கியம், தமிழிசை, தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள், அரசின் இலக்கிய நிறுவனங்கள், நவீன எழுத்தாளர்களின் பழந்தமிழ் ஈடுபாடு, தாகூர் பாரதி ஒப்பீடு என இப்படிப் பல இலக்கிய அம்சங்கள் குறித்து இந்நேர்காணலில் அதிரடி காட்டுகிறார் கு. அழகிரிசாமி. உற