விஜயா வாசகர் வட்டம் வாசகர்களைக் கௌரவிக்கும் விருது
விஜயா வாசகர் வட்டம்
வாசகர்களைக் கௌரவிக்கும் விருது
எஸ்.அமரநாதன் எஸ். ரங்கராஜ் ரெங்கலெ. வள்ளியப்பன்
படைப்பாளிகளையும் மொழிபெயர்ப்பாளர்களையும் விருதுகள் மூலம் கௌரவித்துவரும் விஜயா வாசகர் வட்டம் தற்போது வாசகர்களைக் கௌரவிக்கும் விருதினை அறிவித்திருக்கிறது. ‘அன்பின் பெருமழை’ அப்பச்சி பழனியப்பர் வாசகர் விருது என்னும் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படவிருப்பதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
விஜயா வாசகர் வட்டத்தின் முதலாம் ஆண்டுக்கான வாசகர் விருது, வாசிப்பை நேசிக்கும் எஸ். அமரநாதன், எஸ். ரங்கராஜ், ரெங்க லெ. வள்ளியப்பன் ஆகிய மூன்று வாசகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. விருதாளர்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகையும் பாராட்டுக் கேடயமும் அளிக்கப்படும்.
வாசகர் விருது விழா, வரும் மே மாதம் முதல் தேதி, கோவை விஜயா பதிப்பகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெற உள்ளது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன், விஜயா பதிப்பகம் நிறுவனர் மு. வேலாயுதம், புரவலர் பி.எல்.சுப்பிரமணியன், கவிஞர் க.வை. பழனிச்சாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.