நீலமலை இளவரசி
ஓவியம்: செல்வம்
நீலமலையின் ஒடுங்கிய பாதையில் நடந்து கொண்டிருந்தாள் மகிழ்மொழி. வன இலாகா தங்கள் தேவைக்காக அமைத்த மண் பாதையிது. கங்காரு, வாலாபீ, வொம்பற், குவாலா ஆகியன பாதையில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தன. நீலமலைக்கு மகிழ்மொழி முன்னரும் தனியேயும் தாயுடனும் தன்னுடன் படிக்கும் தோழிகளுடனும் வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அதற்கான தேவை இருந்தது; இன்றும் அப்படித்தான்!
திடீரென நீலமலையின் குளிரையும் தாண்டி உடம்பில் உஷ்ணம் பரவி வேர்த்ததால், கொண்டுவந்த பைக்குள் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்தாள். அடிவயிறு கவ்விப் பிடித்தது. சிறுநீர் கழிக்கவேண்டும்போல இருந்தாலும் வரவில்லை. தொடர்ச்சியாகக் குருதி கசிவதால் உள்ளாடை நனைந்து நசநசத்தது. பாதத்திலிருந்து பிட்டம்வரை தசைநார்கள் வலுவிழந்து வலித்தன. அவளால் தொடர்ந்து ந